இல்லத்தரசிகளுக்கு இன்று வெளியான அதிர்ச்சி தகவல்!!

லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 363 ரூபாவால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, லாப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1,856 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறிய ரக லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அந்த சிலிண்டரின் புதிய விலை 743 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, லிட்ரோ சமையல் Read More

Read more

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,820 அமெரிக்க டொலராக பதிவாகி உள்ளது. அமெரிக்க டொலர் மற்றும் அமெரிக்க கருவூல பத்திரங்களின் உற்பத்தித்திறன் அதிகரித்ததன் காரணமாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் லேசான அதிகரிப்பு காணப்பட்டது. எனினும், உலக சந்தையில் தங்கத்தின் விலை1,800 அமெரிக்க டொலருக்கும் மேலாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு Read More

Read more

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் பசில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் தமது கடைமைகளை பொறுப்பேற்ற பின்னர் பெல்லங்கல ரஜமஹா விகாரைக்கு நேற்று மாலை விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலுலம் பொது மக்களின் நலன் கருதி எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று Read More

Read more

இலங்கையில் தங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை – ஆயிரக்கணக்கானோருக்கு அபாயம்!!

இலங்கையில் தங்க இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் உள்ளூர் சந்தையில் தங்கத்திற்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாக அனைத்து நகைக்கடை சங்கம் கூறுகிறது. தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நகை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக தங்க இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்க இறக்குமதிக்கான தடை இன்னும் நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஒரு பவுண் தங்கத்தின் விலை சுமார் 116,500 ரூபாயாக Read More

Read more

இன்று முதல் விலையேற்றப்படும் மற்றுமோர் உணவுப் பொருள்!!

நாட்டில் உள்ள அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், இன்று முதல் பாண், பணிஸ் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக தொழில்வாய்ப்பு பெரும் பிரச்சினையாக இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த Read More

Read more

தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்பட்ட அதிகரிப்பு

உலக சந்தையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை, நேற்றைய தினம் மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. இதன்படி, தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1,745 டொலராக பதிவாகியுள்ளது. கடந்த மாதத்தில் 0.72 வீதத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை, நேற்று முதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,845 டொலர் வரை அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இந்த காலப் பகுதியில் தங்கத்தின் விலை அதிகரிக்க Read More

Read more