500 ரூபாவால், 50 கிலோகிராம் சீமெந்தின் விலை அதிகரிப்பு!!

சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன, இந்த விலை உயர்வுக்கு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதிகளின் விலையை அதிகரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

திடீரென அதிகரித்தது முட்டையின் விலை!!

இலங்கையில் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளது. கால்நடைகளுக்கான உணவு  தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு போன்ற காரணத்தால் ஒரு முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களில் 840 ரூபாவாக அதிகரித்திருந்த கோழி இறைச்சியின் விலை தற்போது 650 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தையில் முட்டையின் விலையானது 30 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு!!

அரிசி மற்றும் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அது குறித்த வர்த்தமானி அறிவிப்பு சற்றுமுன்னர் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலையாக 125 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சீனி விலை 122 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சிவப்புச் சீனியின் விலை 128 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதிசெய்யப்படாத ஒரு கிலோ சிவப்புச் சீனியின் விலை 125 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

இலங்கையில் சடுதியாக அதிகரிக்கப்படடது அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை!!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். சதொச மொத்த விற்பனை நிலையத்தில் 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை, தற்போது 120 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு விலை 250 ரூபா வரை அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை விபரங்கள், சிவப்பு பருப்பு Read More

Read more