யாழில் 15 வயதில் தாயாகிய சிறுமி – பின்னணியில் 18 வயது இளைஞன்

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தாயாகியுள்ளார். பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வழங்கிய தகவலிலையே குறித்த விடயம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கோப்பாய் காவல்துறையினரிடம் முறையிட்டதையடுத்து விசாரணைகள் நடாத்தப்பட்டன. விசாரணையில் 18 வயதுடைய இளைஞர் ஒருவருடன் குறித்த சிறுமி குடும்பமாக வாழ்ந்து வருகின்றமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   Read More

Read more