அடுத்து ஒரு முக்கிய உற்பத்தியும் இடைநிறுத்தப்பட்டது நாட்டில்!!

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷ உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லங்கா திரிபோஷ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷா இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் திரிபோஷ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே திரிபோஷ நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

Read more

கர்ப்பிணி தாய்மாருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை தவிர்ந்த, அனைத்து தடுப்பூசிகளுக்கும் WHO அனுமதி!!

இதன்படி ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசியை தவிர்ந்த, மற்றய அனைத்து விதமான தடுப்பூசிகளையும் கர்ப்பணித் தாய்மாருக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கர்ப்பணித் தாய்மார்கள் கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு தடுப்பூசியை செலுத்திக் கொண்ட எந்தவொரு கர்ப்பணித் தாய்க்கும், வேறு நோய்கள் Read More

Read more

“Covid-19 Virus கர்ப்பணித் தாய்மார்களை தாக்கினால் அது தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து – குழந்தை பெற்றெடுப்பதை, ஒரு வருடத்திற்கு பிற்போடுமாறு கோருகின்றேன்….” வைத்தியர் ஹர்ஷ அத்தபத்து!!

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக, கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹர்ஷ அத்தபத்து கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றினால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். டெல்டா தொற்று தற்போது பரவி வருவதனால் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக, சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். இதன்போது Read More

Read more