தபால் ஊழியர்கள் 32 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்

தபால் ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார (Sindhaka Bandara) தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து 32 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை தபால் ஊழியர்கள் நடத்த தீர்மானித்துள்ளனர். இன்று மாலை 4 மணி தொடக்கம் நாளை நள்ளிரவு வரை வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், பல தபால் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று காலை Read More

Read more

அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் 4 நாட்கள் மாத்திரம் திறக்கப்படும்…… Ranjith Ariyaratane!!

நாடளாவிய ரீதியில் அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் 4 நாட்கள் மாத்திரம் திறக்கப்படும் என அஞ்சல்மா அதிபர் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள எதிர்வரும் வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டும் அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளது. அதற்கமைய, திங்கள், செவ்வாய் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்படும் என அஞ்சல்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

கொரோனா சூழ்நிலையில் தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்று (13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சில பகுதிகளில் கடிதங்கள் ஒன்று விட்ட ஒருநாள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார் அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அஞ்சல் அட்டைகளின் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

Read more