சற்றுமுன்னர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(07/06/2023) காலை கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மருதங்கேணியில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காவல்துறையினருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார். மருதங்கேணி காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாக நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் Read More

Read more

19KG கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் கூறிய காவல்துறை….. கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!!

19 கிலோ கஞ்சாவை கொஞ்சம் கொஞ்சமாக எலிகள் தின்று விட்டதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 30 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதில் தற்போது 11 கிலோ கஞ்சாவை மட்டுமே காவல்துறையினர் நீதிமன்றில் ஒப்படைத்தனர். இது குறித்து எழுத்துபூர்வமாக காவல்துறையினர் தெரிவித்தபோது பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. பழுதடைந்த கட்டடம் Read More

Read more

சுற்றுலா பயணிக்கு எரிபொருள் வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி….. காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை !!

காலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காவல்துறை அதிகாரி எரிபொருள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்றையதினம்(02/07/2022) மோட்டார் சைக்கிளில் சென்ற சுற்றுலா பயணி எரிபொருள் பெறமுயற்சித்த வேளை காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை தடுத்துள்ளார். இது தொடர்பான Twitter  பதிவை பார்வையிட பார்வையிட இங்கே சொடக்குங்கள்…………… இது தொடர்பாக வெளியான காணொலி காட்சியில் சுற்றுலாப் பயணிக்கு எரிபொருளை வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி எமது தேசிய கொள்கை சுகாதார Read More

Read more

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக…. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைக் கோரி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் உட்பட மேலும் மூவரால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதி (leave to proceed) தொடர்பில் குறித்த மனுவானது உயர் நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (02/07/2022) குறித்த மனுவானது நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிரதிவாதிகள் மூவர் மாத்திரமே நீதிமன்றத்திற்கு Read More

Read more

பட்டப்பகலில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணுக்கு திரவத்தை ஊற்றி உயிருடன் தீ வைத்த நபர்!!

கனடாவின் ரொறன்ரோவில் பட்டப்பகலில் பேருந்து ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும், இது ஒரு தற்செயலான தாக்குதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இது ஒரு கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர். இளம் Read More

Read more

காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்….. 6 காவல்துறையினர் படுகாயம் – பெண்கள்  உட்பட 9 பேர் கைது (காணொளி)!!

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பின் புறநகர் அத்துருகிரிய பகுதிலேயே குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது . இதன்போது, 6 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் பெண்கள்  உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போயிருந்த போதும், வரிசையில் காத்திருந்த மக்கள் எரிபொருள் கேட்டு குழப்பத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஆறு காவல்துறை உத்தியோகத்தர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக Read More

Read more

விமானத்தில் சென்ற இலங்கை காவல் துறையில் பணியாற்றிய அதிகாரி….. தன்னை படகு மூலம் அகதியாக வந்ததாக பதிவு செய்யும் முயற்சியில் கைது!!

இலங்கையில் இருந்து விமானத்தில் இந்தியா சென்ற இலங்கையர் அகதியாக பதிவு செய்ய படகில் வந்ததாக கூறி நாடகம் இந்தியாவின் தனுஷ்கோடியில் இடம்பெற்றுள்ளது ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் காவல்துறையினர் அவரை மீட்டு விசாரணைக்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை Read More

Read more

கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார் ‘ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ’!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பில் இன்று(09/06/2022) இரவு 8.00 மணிக்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு நேற்று(08/06/2022) பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குறித்த Read More

Read more

அல்வாயில் பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்த முயற்சி!!

பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை நள்ளிரவு நேரம் வீடு புகுந்து நபர் ஒருவர் கடத்த முயற்சி மேற்கொண்டதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்வாய் மேற்கு பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போதே 4 வயது சிறுமியை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்கம் பேத்தியாருடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தார். சிறுமியும் சிறுமியின் சகோதரனும் அருகே உறங்கிக் கொண்டிருந்தார்கள்.   இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை(06/06/2022) நள்ளிரவு 12 மணி அளவில் சிறுமியை Read More

Read more

மகிந்தவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது!!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மே 9 காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more