நா‌ட்டு நிலமையால் போராட்டத்தில் கண் கலங்கிய காவல்துறை அதிகாரி!!

குருநாகலில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த போது கடமையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் இளைஞர்களின் உணர்ச்சிகரமான பேச்சால் கண்கலங்கினார்.   இந் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.   குருநாகலில் உள்ள பிரதமரின் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர். ஆனால் காவல்துறையினர் வீதித் தடைகளை அமைத்து தடுத்தனர்.   இதனை தொடர்ந்து, நாங்களும் உங்கள் பிள்ளைகள் போன்று தான் எங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறோம் என தங்கள் இன்னல்களை காவல்துறையினருக்கு எடுத்துக்காட்டினார்கள்.   Read More

Read more