அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு….. சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக வழக்குத் தாக்கல்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “அச்சுவேலி வடக்கில் இன்று திருமண நிகழ்வு இடம்பெற்றது. மணமகன் மிருசுவிலைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணிக்கப்பட்டது. அத்துடன், Read More

Read more

வடமாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனிற்கு Covid19 உறுதி!!

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவருடன் பழகியவரென்ற அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more

அதிகரிக்கும் கொரோனா தொற்று – அமைச்சரவை அளித்த அனுமதி

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாளொன்றுக்கான பி சி ஆர் பரிசோதனை யை அதிகரிக்கவும் மருத்துவமனைகளில் உள்ள நோயாளர்களின் கட்டில்களின் எண்ணிக்கையை 3000 ஆக அதிகரிக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளளது. நாளொன்றுக்கு பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாக இணை அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும் பெருந்தோட்ட அமைச்சருமான ரமேஷ் பத்திரண வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். “நாங்கள் தற்போது ஒரு நாளைக்கு 20,000 சோதனைகள் செய்கிறோம். மேலும் Read More

Read more