அரச பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதல்….. ஒருவர் பலி!!

யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த விபத்துச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும், யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, கிளிநொச்சி இயக்கச்சி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது இயக்கச்சியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்திற்கு திரும்ப முற்பட்ட மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். Read More

Read more

முகமாலையில் அடையாளங்காணப்பட்ட மனித எச்சம்…… அகழ்வு பணிகள் ஆரம்பம்!!

முகமாலைப் பகுதியில் மனித எச்சம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து இன்றைய தினம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி மாவட்ட பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பளை காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டது. அப்பகுதிக்கு இன்று விஜயம் செய்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியை பார்வையிட்டிருந்தார். இதனையடுத்து, Read More

Read more

பளை பொலிஸ் பிரிவில் தூக்கில் தொங்கிய இளம் குடும்பஸ்தர்!!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் நேற்று (20) இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இயக்கச்சியில் ஏ9வீதி அருகே உள்ள பராமரிப்பு இல்லாத தனிநபர் ஒருவரின் காணியிலேயே அவர் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். கரந்தாய் பளையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான காசிநாதர் கஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று 12 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டவரே இன்று மாலை 4.00மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More

Read more

பல்கலை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நிமித்தம் முற்றாக முடங்கிய நகரங்கள்!

யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தல் காரணமாக கிளிநொச்சி பிரதேசம் முற்றாக முடங்கியது. கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன, அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன. வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் மக்கள் இன்றி வெறுமையாக காணப்பட்டன. அத்தோடு இன்று பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் Read More

Read more