42 மில்லியன் ரூபா மதிப்புள்ள 128 கிலோவுக்கும் அதிகமான உடன் 53 பார்சல் கேரள கஞ்சா யாழில் கைப்பற்றப்பட்ட்து!!

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் 42 மில்லியன் ரூபா மதிப்புள்ள கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர். கடற்படையினரால் நேற்று(08/06/2023) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 128 கிலோவுக்கும் அதிகமான(ஈரமான எடை) கேரளா கஞ்சா கடலில் சிக்கியது. விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 04 சாக்கு மூட்டைகளை மீட்டுள்ளதுடன், அதில் இருந்து 53 பார்சல்களில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 128 கிலோ 100 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா இருந்தது. தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகள் காரணமாக கேரள கஞ்சாவை நாட்டிற்கு Read More

Read more

கச்சதீவை இந்திய மத்திய அரசு 99 ஆண்டு குத்தகைக்கு பெற வேண்டும் என…… ஜவாஹிருல்லா கோரிக்கை!!

இலங்கை வசம் உள்ள கச்சதீவை இந்திய மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும் என்று எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார். தங்கச்சிமடம், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் சேதமடைவது இலங்கை மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர் நிகழ்வாக உள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியா கடந்த மூன்று மாதங்களில் 250 கோடி டொலர்களை இலங்கைக்கு கொடுத்துள்ளது. மேலும், 22,500 கோடி தேவையெனவும் அந்நாடு கேட்டுள்ளது. 140 கோடி டொலர்களை சீனா இலங்கையில் முதலீடு செய்துள்ளது. இதற்காக துறைமுகத்தின் Read More

Read more

இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள 4000mt மிதக்கும் தடாகத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது!!

இந்தியாவிடமிருந்து இலங்கை கடற்படைக்கு வழங்கப்படவுள்ள 4000 தொன் மிதக்கும் தடாகத்திற்கான (Floating Dock) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தினால் (Goa Shipyard Ltd) நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த மிதக்கும் தடாகமானது, 30 மாதங்களுக்குள் திருகோணமலை கடற்படைத்தளத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இந்தியா ஒதுக்கியுள்ளது. இதனை தவிர, 06 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டில் இலங்கை கடற்படை தலைமையகத்திலும் , ஏனைய 8 இடங்களிலும் சமுத்திர மீட்புப் Read More

Read more

இந்திய மீனவர்களின் 105 படகுகள் ஏலத்தில் விடுவதற்கு தீர்மானம்!!

தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை கடற்படை பறிமுதல் செய்து வருகின்றது. இதற்கமைய 105 படகுகள் அரசுடமையாக்கப்பட்டு தொடர்ச்சியாக 5 நாட்கள் பகிரங்க ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஏலம், எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளையும், Read More

Read more

நாயாறு கடலில் கரையொதுங்கியுள்ள 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட மர்மப் பொருள் போன்ற பாரிய கப்பல்!!

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் மர்மப் பொருள் போன்ற பாரிய கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த கப்பல் கரை ஒதுங்கியுள்ளதைக் கண்டு கடற்படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, குறித்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்துள்ளனர். 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாகக் காணப்படும் இந்தக் கப்பல், செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுக்கியுள்ளது. இந்தக் கப்பல் யாருடையது? எங்கிருந்து Read More

Read more

முல்லைத்தீவு நாயாற்றில் கவிழ்ந்தது கடற்படையின் படகு!!

முல்லைத்தீவு காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட நாயாறு கடற்பரப்பில் கவிழ்ந்த கடற்படை படகு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது காவல்துறையினர் தெரிவித்துள்ளார். நாயாறு கடற்படை முகாமில் இருந்து கடலுக்கு சென்ற குறித்த கடற்படை படகு நேற்றைய தினம் பிற்பகல் ஒரு மணியளவில் கடற்சீற்றம் காரணமாக கவிழ்த்துள்ளது. சட்டவிரோத மீன்பிடி படகுகளை கண்காணிக்கவென கடலுக்கு சென்ற குறித்த கடற்படை படகு கடற்சீற்றம் காரணமாக கவிழ்த்துள்ளது இந்த படகில் மூன்று கடற்படையினர் பயணம் செய்த நிலையில் படகு கவிழ்ந்ததும் ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளதோடு மற்றய Read More

Read more

இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது அமெரிக்காவின் டக்லஸ் மொன்றோ கப்பல்!!

அமெரிக்காவின் டக்லஸ் மொன்றோ கப்பல் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்த கப்பல் அமெரிக்காவில் மெச்சிக்கோ பிராந்தியத்தில் சியேட்டில் துறைமுகத்தில் உள்ள அமெரிக்க கரையோர பாதுகாப்பு முகாமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. சமூத்திர பிராந்தியத்தில் பொதுவான சவால்களை வெற்றி கொள்வதற்கான பங்குடமையை செயற்பாட்டை வலுவூட்டுதல் மற்றும் மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை கடற்படைக்கு அமெரிக்க கரையோர பாகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இரண்டாவது கப்பல் இதுவாகும். இலங்கை கடற்படை நீண்டதூர கடல் பயணத்தை அடுத்த வருடம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை Read More

Read more

பாசையூர் பகுதியில் மீட்கப்பட்டது 1,500 கிலோ கிராம் மஞ்சள்!!

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் சிறிலங்கா காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் புலனாய்வு பிரிவினரால் இன்று காலை இந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டன.   மஞ்சளைக் கடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாசையூரைச் சேர்ந்த 64 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் சுங்கதிணைக்கள Read More

Read more

அடுத்து சிக்கிய 250 கிலோ கிராம் ஹெரோயின்!!

பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் சுமார் 250 கோடி ரூபா பெறுமதியான 250 கிலோகிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பணியகத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, கடற்படையினரின் உதவியுடன் இன்று அதிகாலை அதிரடி சுற்றிவளைப்பை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். இதன்போதே,  குறித்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த போதைப்பொருளை படகு ஒன்றில் கொண்டுவந்த 5 சந்தேகநபர்களும்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

40 Metric tons Oxygen நாட்டை வந்தடைந்தது!!

கொரோனா நோயாளர்களுக்கு தேவையான ஒட்சிசனை ஏற்றிய இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இன்று (23) அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் கப்பல் 40 டொன் ஒட்சிசனை கொண்டு வந்துள்ளது. இதேவேளை, இந்தியாவிற்கு சொந்தமான சக்தி கப்பலும் நேற்று 100 டொன் ஒட்சிசனை இலங்கைக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more