வைத்தியசாலை சிற்றுாழியர் முகத்தில் காட்டு பாதையில் வைத்து திரவம் ஒன்றை ஊற்றி தாக்குதல் முயற்சி!!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சிற்றுாழியரான பெண் மீது ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் காட்டு பகுதியில் வைத்து முகத்திற்கு திரவம் ஒன்றை ஊற்றப்பட்டதுடன் தாக்குதல் முயற்சி இடம்பெ ற்றுள்ளது. திரவத்தை வீசிதாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கண்கள் பாதிக்கப்பட்டு குறித்த சிற்றுாழியர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தூரபிரதேசங்களில் இருந்து வனப்பகுதிகளை கடந்து பணிக்கு வரும் ஊழியர்களை கடும் அச்சத்தில் தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றி Read More

Read more

நாயாறு கடலில் கரையொதுங்கியுள்ள 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட மர்மப் பொருள் போன்ற பாரிய கப்பல்!!

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் மர்மப் பொருள் போன்ற பாரிய கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த கப்பல் கரை ஒதுங்கியுள்ளதைக் கண்டு கடற்படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, குறித்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்துள்ளனர். 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாகக் காணப்படும் இந்தக் கப்பல், செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுக்கியுள்ளது. இந்தக் கப்பல் யாருடையது? எங்கிருந்து Read More

Read more

13 வயது சிறுமியின் கொலை தொடர்பில் – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்த உண்மை!!

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணாமற்போன 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனா கடந்த Read More

Read more

தமிழர் பகுதியில் புதையல் தோண்டிய முயற்சி தற்போதைக்கு தோல்வியில் முடிவு!!

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தோல்வியில் நிறைவடைந்துள்ளது. இறுதிக் கட்ட யுத்ததின் போது புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் அகழ்வு நடவடிக்கை நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த அகழ்வுப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்கனவே இரண்டு குழிகள் தோண்டப்பட்டு நீர் Read More

Read more

முல்லைதீவில் சற்றுமுன் பதிவானது முதலாவது வெடிப்பு சம்பவம்!!

முல்லைத்தீவு மாவட்டத்திலும் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடொன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11 மணியளவில் சமையல் செய்துகொண்டிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அருகில் யாரும் இல்லாததனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகிய Read More

Read more

முல்லைத்தீவு நாயாற்றில் கவிழ்ந்தது கடற்படையின் படகு!!

முல்லைத்தீவு காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட நாயாறு கடற்பரப்பில் கவிழ்ந்த கடற்படை படகு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது காவல்துறையினர் தெரிவித்துள்ளார். நாயாறு கடற்படை முகாமில் இருந்து கடலுக்கு சென்ற குறித்த கடற்படை படகு நேற்றைய தினம் பிற்பகல் ஒரு மணியளவில் கடற்சீற்றம் காரணமாக கவிழ்த்துள்ளது. சட்டவிரோத மீன்பிடி படகுகளை கண்காணிக்கவென கடலுக்கு சென்ற குறித்த கடற்படை படகு கடற்சீற்றம் காரணமாக கவிழ்த்துள்ளது இந்த படகில் மூன்று கடற்படையினர் பயணம் செய்த நிலையில் படகு கவிழ்ந்ததும் ஒருவர் நீந்தி கரைசேர்ந்துள்ளதோடு மற்றய Read More

Read more

முல்லைத்தீவில் கடவுளின் பெயரை கூறி “சாபம் கிடைக்கும் என மிரட்டி” மதம் மாற்ற முயற்சித்ததாக போலீஸில் புகார்….. மூவர் வாகனத்துடன் கைது!!

முல்லைத்தீவில் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த குழுவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கிழவன்குளம் கிராமத்தில் மதம் மாற்றச் சென்ற கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர் தன்னை பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக மாங்குளம் காவல் நிலையத்தில் நபர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்து மாங்குளம் காவல்துறையினர் சந்தேக நபர்கள் Read More

Read more

கீழ் வளிமண்டல பிரதேச குறைந்த அழுத்தநிலைமை சில மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாறக்கூடும்….. எச்சரிக்கையாக இருங்கள்!!

வங்காள விரிகுடாவில் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்றைய வானிலை குறித்து வெளிவந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானிலையும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் Read More

Read more

முல்லைத்தீவிலிருந்து வவுனியா சென்ற மனைவி மாயம்!!

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05-11-2021 அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார் ஜெயந்தி எனும் 42 வயதுடைய பெண் இன்றுவரை வீடுதிரும்பாத நிலையில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கணவர் முறைப்பாடு அளித்துள்ளார். குறித்த பெண் காணாமல் போன இரண்டு தினங்களில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கணவனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும் இன்று வரை மனைவி தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் Read More

Read more

மாவீரர் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவில் விதிக்கப்பட்டது தடை!!

எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி சரவணராஜா இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார். இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம் ஆகிய ஏழு காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையின் Read More

Read more