ஜனாதியால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்!!
வர்த்தக அமைச்சின் செயலாளர் ஜே.எம்.பி.ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அரச தலைவரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது வர்த்தக அமைச்சின் செயலாளராக இருப்பதுடன், ஜயவர்தன பல நிறுவனங்களின் தலைவராகவும் மேலும் பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார். ஜயவர்தனவை செயலாளர் பதவியிலிருந்து நீக்குமாறு முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், அமைச்சின் புதிய செயலாளராக நீல் பண்டார ஹபுஹின்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More