கொடிகாமம் அரச வைத்தியசாலையில் தாத்தாவுக்கு சிகிச்சை பெறவந்த யுவதியிடம் தொலைபேசி இலக்கம் கேட்டு இல்லையென்றவுடன்….. தனது இலக்கத்தை கொடுத்த வைத்தியர்!!

யாழ். கொடிகாமம்  பகுதியில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட குழப்பத்தையடுத்து அங்கு பணியாற்றிய வைத்தியர் யாழ். கோப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். குறித்த வைத்திய சாலையில் தனது தாத்தாவுக்கு சிகிச்சை பெறவந்த யுவதியிடம் வைத்தியர் தொலைபேசி இலக்கத்தை கேட்டதையடுத்து யுவதி தன்னிடம் தொலைபேசி இல்லையென கூறியுள்ளார். இதனையடுத்து வைத்தியர் தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்துள்ளார். இதனை தனது உறவினர்களிடம் குறித்த யுவதி தெரிவித்துள்ளார். இதனால் யுவதியின் உறவினர்கள் 8 பேர் குறித்த வைத்தியரை Read More

Read more

மொபைல் கேமால் தூக்கிட்டு தற்கொலை செய்த வயது சிறுவன்!!

அநுராதபுரத்தைச் சேர்ந்த 12 வயது மாணவன் ஒருவன் கைத்தொலைபேசியைப் பயன்படுத்த பெற்றோர் மறுத்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அனுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியின் ஏழாம் தர மாணவர் என அடையா ளம் காணப்பட்டுள்ளார். இணையம் ஊடாக கற்றலின் போது தாயாரின் கைத்தொலைபேசியை பயன்படுத்திய குறித்த மாணவன் “Game” விளையாட்டில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது. கைத்தொலைபேசியில் “Game” விளையாடும் பழக்கம் கொண்ட குறித்த மாணவன் கடந்த 11ஆம் திகதி பாடசாலையைத் தவறவிட்டதால் அவரது தாயார் மாணவனைத் திட்டிவிட்டு, Read More

Read more

கிடைத்தது “Number Portability” வழங்குவதற்கான சட்டரீதியான அனுமதி !!

கையடக்க தொலைபேசி இலக்கங்களை வேறு வலையமைப்பிற்கு மாற்றிக்கொள்வதற்கான (Number Portability) வசதியை சட்டரீதியாக வழங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. இத்தகவலை இலங்கையின் தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனாநாயக்க உறுதிப்படுத்தினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அனைத்து சந்தாதாரர்களுடனும் (subscribers) ஒரு மைய தரவுத்தளத்தை உருவாக்க இந்த வார தொடக்கத்தில் அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். “எண்ணை வரைபடமாக்க மத்திய தரவுத்தளம் Read More

Read more

ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ள வசதி – கல்வி இராஜாங்க அமைச்சர் தகவல்!!

அரச பாடசாலை ஆசிரியர்களுக்கு டெப் அல்லது ஸ்மார்ட் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கான சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். கொரோனாதொற்று நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக பெரும் தியாகத்தை செய்து வருகின்றனர். மாணவர்களின் சிரமங்களை மட்டுமல்லாது, ஆசிரியர்களின் சிரமங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துளளார்.

Read more

கைத்தொலைபேசிகளுக்குள் மீண்டும் ஊடுருவும் ‘ஜோக்கர்’ – மக்களுக்கு எச்சரிக்கை!!

‘ஜோக்கர்’ என்ற வைரஸ் மூலம் கைத்தொலைபேசியில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படுவது மட்டுமின்றி கைத்தொலைபேசியை செயலிழக்கச் செய்வதாகவும் குயிக் ஹீல் அன்டிவைரஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. முன்னதாக கடந்த 2020 ஜூலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கக்கூடிய 40க்கும் மேற்பட்ட செயலிகளை இந்த வைரஸ்கள் குறிவைத்திருந்தது. இதனையடுத்து, குறித்த செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கியது. தற்போது ‘ஜோக்கர்’ என்ற இந்த வைரஸ் 8 க்கும் மேற்பட்ட செயலிகள் மூலம் கைத்தொலைபேசிகளுக்குள் ஊடுருவி, தகவல்களை திருடி வருவதாக தெரியவந்துள்ளது. Read More

Read more

தென்னாசியாவிலேயே இரண்டாம் இடத்தை பிடித்தது இலங்கை!

தென்னாசியாவில் அதிகளவில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாமிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் 60 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்க்பபட்டது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69 வீதமாக உள்ளது. நேபாளத்தில் 53 வீதமானோரும், பாகிஸ்தானில் 51 வீதமானோரும் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துகிறார்கள். தென்னாசியாவில் குறைந்தளவில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தும் நாடாக பங்களாதேஷ் உள்ளது. அங்கு 41 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை Read More

Read more