இலங்கை தமிழர் அகதிகளுக்காக 317 கோடிரூபா செலவில் வீடுகள் கட்டி கொடுக்க தமிழக அரசு முடிவு!!

தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருடன் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துரையாடி, தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார். தாளமுத்துநகர், மாசார்பட்டி, குளத்துவாய்பட்டியிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களையும் ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்பட தமிழகம் முழுவதும் 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு 317 கோடிரூபாவில் புதிய Read More

Read more

தமிழ் மொழியை ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும்!!

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) வலியுறுத்தியுள்ளார். திருப்பதியில் நடைபெற்ற 29 ஆவது தெற்கு மண்டல பேரவையின் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஸ்டாலினின் உரையை பொன்முடி வாசித்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என Read More

Read more

“ஈழத்தமிழர்கள் என்னை உடன்பிறப்பாக ஏற்று கொள்ளலாம்…..” MK ஸ்டாலின்!!

இலங்கைத் தமிழர்கள் தன்னை உடன் பிறப்பாக ஏற்றுக்கொள்ளலாம் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் நலனுக்காக புதிய வீடுகள் கட்டித் தருதல், கல்வி உதவித் தொகை, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதி உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கமைய தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்  தொடக்க விழா நேற்றைய தினம் வேலூர் Read More

Read more

இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர் தொடர்பில் M. K. Stalin வெளியிட்ட அறிவிப்பு – நாமலின் பதிவு!!

இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்,தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதானம் செலுத்தியமையை வரவேற்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் இதனைக் கூறியுள்ளார். யுத்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மீள வருகை தரும் அகதிகளுக்கு ஜனாதிபதி Read More

Read more

“இனி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய தி.மு.க உறுப்பினர் பூண்டி கலைவாணன், அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் நேற்று வெளியிட்ட அறிவுப்புக்களை பாராட்டினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றும் நானும் Read More

Read more

ஒலிம்பிக் வீரர்களை வாழ்த்தி யுவன் இசையமைத்த பாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!!

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், ‘‘வென்று வா வீரர்களே’’ என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருவாக்கி உள்ளார். மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், ‘வென்று வா Read More

Read more

7 பேரின் விடுதலையை குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் கடிதம்!!

கொரோனா காலகட்டமான இக்கட்டான சூழலில் 7 பேரின் விடுதலை கோரிக்கையை குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென தமிழக அமைச்சரவையில் 2018 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையை முதல்வர் ஸ்டாலின் நினைவுபடுத்தியுள்ளார். Read More

Read more

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”… பதவியேற்றுக் கொண்ட தமிழக முதலமைச்சர்

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்வு ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. ஸ்டாலின் உடன் 34 அமைச்சர்கள் கொண்ட தமிழக அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டர். அத்துடன் ஆளுநர் இவர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைதர்தார். ஸ்டாலின் பதவியேற்கும் போது “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” எனக்கூறி பதவி ஏற்றுக்கொண்டமை எல்லோரின் கவனததையும் பெரிதும் ஈர்த்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக Read More

Read more