Online Video Game இற்கு அடிமையான சிறுவன் எடுத்த விபரீத முடிவு!!

15 வயது சிறுவன் ஒன்லைன் வீடியோ கேமுக்கு அடிமையானதால் அவனது பெற்றோர் சிறுவனிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்ததால் விபரீத முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளான். மாத்தறை ரொட்டும்பா பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளான். இப்பகுதியில் உள்ள பல சிறுவர்கள் ஒரு குறிப்பிட்ட ஒன்லைன் வீடியோ கேமுக்கு அடிமையாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஒன்லைன் வழியாக நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக சிறுவர்கள் மொபைல் Read More

Read more

அபாய பகுதிக்குள் கொண்டுவரப்பட்ட மாவட்டங்கள் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 15,161 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவற்றில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 4,509 உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு நோயாளர்களும், கம்பாஹா மாவட்டத்தில் 1,905 உறுதிப்படுத்தப்பட்ட டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக ஆபத்துள்ள சுகாதார பிரிவுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமானையின் கீழ் சிறப்புக் குழுக்கள் நிறத்தப்பட்டுள்ளதாகவும் Read More

Read more

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!!

சீரற்ற வானிலையால், 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. அதற்கமைய, காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுக்கும் களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, கலவான, அயகம Read More

Read more