கொரோனா தொற்று உறுதியாகுபவர்களின் எண்ணிக்கை குறைவடைகின்ற போது தான் நாட்டை திறக்க முடியும்…… சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவரின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், தடுப்பசி வழங்கும் செயற்பாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. விரைவில் இந்த தடுப்பூசி திட்டத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read more

இன்று மாலை மூன்று மணிக்குள் முடிவு!!

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கலாமா? அல்லது வேண்டாமா என்ற முடிவு இன்று (03) மாலைக்குள் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார். சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனாவை ஒழிக்கும் தேசிய செயலணி இன்று ஜனாதிபதி தலைமையில் கூடி உண்மை நிலையை ஆராயும். பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கப்படும் என இராணுவத் தளபதி கூறினார். இதேவேளை, கொரோனா பரவலை தடுப்பதற்கு நாடளாவிய ரீதியில் 18 Read More

Read more

நாளை முக்கிய முடிவை எடுக்க போகும் கோட்டாபய!!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்சு சட்டத்தை நீடிக்கலாமா, என்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (வெள்ளிக்கிழமை) முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் செயலணி யின் வழக்கமான சந்திப்பு, நாளை (03) ஜனாதிபதி தலைமையில், ந​டைபெறும். இதன்போதே ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக தற்போதைய நிலைமையை ஜனாதிபதி மதிப்பாய்வு செய்வதுடன் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை நீட்டிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. Read More

Read more

ஊரடங்கு சட்டம் நீக்குவது தொடர்பில் தகவல்!!

நாட்டை முடக்குவதன் மூலம் மட்டும் கொரோனா தொற்றுநோயை சமாளிக்க முடியாது, மக்களின் ஒத்துழைப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியமானது என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். இதேவேளை, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், “நாட்டை முடக்குவதன் மூலம் மட்டுமே Read More

Read more