பிரபல தனியார் வைத்தியசாலைக்கு எதிராக யாழில் சட்ட நடவடிக்கை….. வி.மணிவண்ணன்!!

மருத்துவக் கழிவை தீயிட்ட தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார். பரமேஸ்வரா சந்திப் பகுதியில் நொதேன் தனியார் வைத்தியசாலையின் (Northen Private Hospital) மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவது தொடர்பில் நேற்று அப்பகுதி மக்களினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் அவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள யாழ் மாநகர முதல்வர், “எவராக இருந்தாலும் சட்ட விரோதமான முறையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மருத்துவ Read More

Read more

கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும், அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாகவும் மாகாணங்களுக்கு இடையிலான தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவ்வாறு பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more