எரிபொருள் விநியோகம் தொடர்பில் ‘Lanka IOC’ வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சிலவற்றுக்கான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இடைநிறுத்தியுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தானத்தின் விதிகள், ஒழுங்குமுறைகளை மீறியதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பதுக்கி வைப்பதாகவும், வாகனங்களுக்கான எரிபொருள் அளவு உத்தரவை சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீறுவதாக முறைபாடு கிடைத்துள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மாகொல தெற்கு, நால்ல, களனியின் பேத்தியகொட, மீரிகம ஆகிய இடங்களிலுள்ள 4 எரிபொருள் நிலையங்களுக்கான விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Read more