17 வருடங்கள் முடிந்தும் கொஞ்சமும் குறையாத வலிகள்….. (நினைவேந்தல் புகைப்படங்கள்)!!

17 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில் யாரும் எதிர்பார்த்திராத பாரிய அழிவு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் ஆட்சே பகுதியில் இருந்து புறப்பட்டது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இதே ஞாயிற்றுக்கிழமையில் இடம்பெற்ற சுனாமி எனும் ஆழிப் பேரலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக உலக வாழ் மக்களால் மறந்துவிட முடியாது. கடலுக்கடியில் உருவான அதிர்வெண் 9 தசம் 1 கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு அலைகள் கரைகளை தாக்கின. இந்த சுனாமியின் Read More

Read more

மேலுமொரு மரணமும் பதிவு….. மொத்த மரணங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு (மிதப்பு பாலம்) கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த எஸ்.நிபா (06 வயது) என்பவரே இன்று காலை உயிரிழந்துள்ளார். இதற்கமைய, குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி உயிரிழந்தோரது எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளது. இவரது சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி திருகோணமலை கிண்ணியாவில் உள்ள Read More

Read more

வீட்டில் திடீரென மரணமடைந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வீட்டில் திடீரென மரணமடைந்தவருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கிண்ணியா பைசல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒருவர் தீடீரென வீட்டில் மரணமடைந்துள்ளார். பின்னர் அவருக்கு செய்யப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர் 70 வயதுடைய ஆண் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு  Prostate சத்திரசிகிச்சை 2017 இல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உயர் குருதி அழுத்தம் இருந்து வந்தமையும் அவரது மருத்துவ சான்றுகளிலிருந்து Read More

Read more