யாழ் – சங்கானையைச் சேர்ந்த 27, 28 வயது தம்பதிகள்….. கட்டுநாயகாவில் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்தனர். கைதான தம்பதி யாழ்ப்பாணம் – சங்கானைப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் இளைஞனுக்கு 27 வயது, யுவதிக்கு 28 வயது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். போலி ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட நிலையில் விமான நிலையத்தின் முனையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது துருக்கியின் விமானம்!!

துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இலங்கைக்கு வந்த விமானம் ஒன்று நேற்று(04/07/2022) விபத்துக்குள்ளாகியுள்ளது. துருக்கி விமான சேவைக்கு சொந்தமான 330 ரக சரக்கு விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. துருக்கியேயின் இஸ்தான்புல்லில் இருந்து சரக்குடன் 330 ரக சரக்கு விமானம் நேற்று(04/07/2022) இரவு 09.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த விமானம் 45 மெற்றிக் தொன் எடையுள்ள ஆடைகளை ஏற்றிக்கொண்டு நேற்று(04/07/2022) இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மீண்டும் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு புறப்படுவதற்கு Read More

Read more

ரஷ்யாவின் “ஏரோஃப்ளோட்” விமான பிரச்சினை….. இலங்கை மீது கடும் அதிருப்தியில் ரஷ்யா – மன்னிப்பு கோரும் அரசியல் பிரபலங்கள்!!

ரஷ்யாவின் ‘ஏரோஃப்ளோட்’ விமான பிரச்சினையால் அசௌகரியங்களுக்கு உள்ளான அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கோருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். ஏரோஃப்ளோட் பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபர் நாளை திங்கட்கிழமை (07/06/2022) நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புகளை முன்வைப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மேலதிகமாக இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு இந்த பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அமைச்சர் டி சில்வா ஒப்புக்கொண்டார். அனைத்து தரப்பினருக்கும் நியாயமான தீர்ப்பு வழங்குவதற்கான சட்ட கட்டமைப்பை வழங்க Read More

Read more

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இனி புதிய நடைமுறைகள்!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தால் வெளியேறும் பயணிகளுக்காக புதிய டிஜிட்டல் நுழைவாயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக மேம்படுத்தல் திட்டங்கள் சிலவற்றை மேற்கொள்வதற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி திட்டமிட்டுள்ளது. அதன்கீழ் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் “ஒரு அடையாள அட்டை” (One ID) எனும் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு முதலாவது முனையத்தின் Read More

Read more

பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் USD உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டம்!!

பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தளை சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையம் என்பனவும் அவற்றில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளன. அதனடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் டொலர்களுக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் டொலர்களுக்கும், இரத்மலானை விமான நிலையத்தை Read More

Read more

கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுடன் பெண் கைது!!

சுங்க வரியை செலுத்தாது இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஆரணங்களுடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இந்த பெண்ணை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணிடம் இருந்தும் 599.404 கிராம் தங்க வலையல்கள் 44 கிராம் எடைக்கொண்ட தங்கச் சங்கிலில் என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Read more