கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் மிக அதிகரிப்பு….. எந்த நேரத்திலும் வான்பாயலாம்!!

பலத்த மழை வீழ்ச்சி காரணமாக கிளிநொச்சி – கனகாம்பிகை  குளத்தின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால் எந்த நேரத்திலும் வான்பாயலாம் என கிளிநொச்சி மக்களுக்கு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. குறித்த குளத்தின் நீர்மட்டம் 10அடி 6 அங்குலத்தை கொள்ளளவாக கொண்டது. ஆனால் தற்போது 9 அடி 9 அங்குலமாக  நீர்மட்டம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் தொடர்ந்தும்  மழை பெய்யுமாக இருந்தால் கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலம் Read More

Read more