ஆசிய விளையாட்டு 2023 பெண்கள் கபடி போட்டி….. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!

பீஜிங்: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 61-17 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.  

Read more

கிளிநொச்சி சிவநகர் கிராமத்திலிருந்து இலங்கை தேசிய கபடி குழாத்துக்குள் தெரிவான 03 வீராங்கனைகள்!!

வாய்ப்புகள் கிடைத்தால் திறமையை நிரூபிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் பலரும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.. கிளிநொச்சியிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பின்தங்கிய சிவநகர் கிராமத்திலிருந்து இலங்கை தேசிய கபடி குழாத்துக்கு 03 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். பாஸ்கரநாதன் டனுஷா, விஜயகுமார் நிதுஷா, இதயரஞ்சன் தேனுஜா ஆகியோரே அந்த மூன்று வீராங்கனைகளாவர். இந்த மூவருமே சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்ப கல்வியைப் பயின்றவர்கள் என்பதுடன் தற்போது உருத்திரபுரம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக அணிக்காக விளையாடும் Read More

Read more