யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை வயோதிபப் பெண்ணை பலியெடுத்த இபோச பேருந்து!!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , பேருந்து நிலைய வளாகத்தினுள் நின்ற வயோதிபப் பெண்ணொருவரை மோதி உள்ளது. விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வைத்தியசாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த வயோதிபப் பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். Read More

Read more