#India Navy

FEATUREDindiaLatestNewsTOP STORIES

இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்தியா விசேட நடவடிக்கை!!

வடக்கில் இருந்து இலங்கையர்கள் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இதற்க்காக 16 படகுகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அடுத்த சில நாட்களில் மேலும் 9 படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இருந்து 84 நபர் இதுவரை இந்தியாவிற்கு புகலிடம் கோரி இந்தியா சென்றுள்ள நிலையில், மேலும் இருவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் இந்திய சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
indiaLatestNewsTOP STORIESWorld

இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ள 4000mt மிதக்கும் தடாகத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது!!

இந்தியாவிடமிருந்து இலங்கை கடற்படைக்கு வழங்கப்படவுள்ள 4000 தொன் மிதக்கும் தடாகத்திற்கான (Floating Dock) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தினால் (Goa Shipyard Ltd) நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த மிதக்கும் தடாகமானது, 30 மாதங்களுக்குள் திருகோணமலை கடற்படைத்தளத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. இதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இந்தியா ஒதுக்கியுள்ளது. இதனை தவிர, 06 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டில் இலங்கை கடற்படை தலைமையகத்திலும் , ஏனைய 8 இடங்களிலும் சமுத்திர மீட்புப் Read More

Read More