ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 145 ரூபாவிற்கு அனைத்து சிறப்பு அங்காடிகளிலும்!!

சதொசவிற்கு மாத்திரம் விநியோகிக்கப்பட்ட இறக்குமதி அரிசி தொகை நிறைவடையும் வரை அவற்றை சிறப்பு அங்காடிகளுக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். அத்துடன், நுகர்வோர் ஒருவருக்கு ஆகக்குறைந்தது ஐந்து கிலோ கிராம் அரிசி விநியோகிக்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 145 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி 175 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

37,000 mt யூரியாவை இறக்குமதிசெய்ய தனியார் துறைக்கு அனுமதி!!

எதிர்வரும் போகங்களுக்கு தேவையான 37,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த உரத்தொகையில் 7,000 மெட்ரிக் தொன் உரம் ஏற்கனவே தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா குறிப்பிட்டார். 12,000 மெட்ரிக் தொன் யூரியாவை எதிர்வரும் நாட்களுக்குள் இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இறக்குமதி செய்யப்படும் உரம், தனியார் துறையின் தலையீட்டுடனேயே நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளது. இதேவேளை, 20,000 மெட்ரிக் Read More

Read more

11,000 தொன் அரிசியுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்!!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 40,000 தொன் அரிசியில் இருந்து 11,000 தொன் அரிசியை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நேற்று (12/04/2022) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்படி, 7000 தொன் நாட்டு அரிசி, 2000 தொன் சம்பா அரிசி, 2000 தொன் சிவப்பு அரிசி உட்பட அண்ணளவாக நான்கு நாட்களுக்குள் இந்தியாவின் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து இந்த அரிசித் தொகை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அரசாங்க Read More

Read more

இரசாயன உரம் 2500mt இறக்குமதிக்கு அனுமதி!!

இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா (Chandana Lokuheva) தெரிவித்துள்ளார். நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சேதன உர இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாக சந்தன லொகுஹேவா தெரிவித்துள்ளார். பழங்கள் மற்றும் மலர் செய்கைக்கு இரண்டாயிரம் மெட்ரிக்தொன் கலப்பு உரம் தேவை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், 913 மெட்ரிக்தொன் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேதன திரவ Read More

Read more

மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!!

சந்தையில் அரிசி விலையை சீரான துறையில் பேணுவதற்கு மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு மெற்றிக்தொன் 460 அமெரிக்க டொலர்களுக்கு, வரையறுக்கப்பட்ட இலங்கை வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பற்றாக்குறையின்றி போதுமானளவு அரிசியை நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கும், பாதுகாப்பான கொள்ளளவைப் பேணுவதற்கும் இயலுமான வகையில் ஒரு லட்சம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு செப்டெம்பர் 27ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் Read More

Read more