மர்மமான முறையில் உயிரிழந்த தாயும் மகனும்! கொலையா? தீவிர விசாரணையில் பொலிஸார்

பொலன்னறுவை – பிஹிடிவெவ – நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 6 வயதுடைய மகனும் 28 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருடைய மூன்று வயது மகனின் உடலிலும் விஷமேறியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தற்கொலையா? அல்லது கொலையா? என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Read more

கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது தொற்று நோய் விசேட மருத்துவமனை!

கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை, கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கென விளையாட்டு மைதானம் பிரார்த்தனை மண்டபம் நூலகம் உள்ளக விளையாட்டரங்கம் திறந்த வெளித் திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் நீண்ட காலம் தங்கநேரிடுபவர்கள் தாம் விரும்பிய உணவு பானங்கள் உள்ளிட்ட (புகையிலை மற்றும் மதுசாரம் தவிர்ந்த) பாவனைப் பொருட்களை அவர்களாகவே வெளியிலிருந்து இணையத்தளம் ஊடாக வாங்கிக் கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். தற்போது Read More

Read more