ஹெரோயின் உள்ளெடுத்த பூசகர் மரணம்….. நல்லூர் பகுதியில் சம்பவம்!!

ஹெரோயின்(Heroin) போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் கோவில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் – நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கோவில் பூசகரே நேற்று(08/06/2023) உயிரிழந்துள்ளார். நேற்று(08/06/2023) மாலை ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

Read more

ஹெரோயினை ஊசி மூலம் பயன்படுத்திய 10 வயது சிறுவன் கைது….. யாழ் – வடமராட்சி பகுதியில் சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயது சிறுவன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்று(03/05/2023) சனிக்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். வடமராட்சி – துன்னாலையைச் சேர்ந்த சிறுவனே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில்  உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. விசாரணைகளின் போது வேறு பல சிறுவர்களும் ஹெரோயினை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். ஹெரோயினை ஊசி மூலம் குறித்த சிறுவன் பயன்படுத்திய நிலையில் Read More

Read more

600 பில்லியன் ரூபா பெறுமதியான 350 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட்து!!

600 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 350 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். பனாமாவில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட கப்பலில் இருந்த பழைய இரும்புப் பொருட்கள் கொண்டுசெல்லப்பட்ட கொள்கலனில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கொள்கலன்கள் பனாமாவிலிருந்து துபாய் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளதுடன், இலங்கையூடாக அதனை இந்தியாவிற்கு அனுப்ப தயாராகியிருந்த நிலையில், இலங்கை சுங்கப் பிரிவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more