Gun shooting

FEATUREDLatestNewsTOP STORIES

நாட்டில் 48 மணி நேரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு!!

தெற்கின் அஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அஹங்கம, பஞ்சாலயவில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கொல்லப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும்காவல்துறையினர் தெரிவித்தனர் . கடந்த 48 மணி நேரத்தில் பதிவான 3வது துப்பாக்கிச்சூடு, சம்பவம் இதுவாகும். பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் வைத்து 31 வயதுடைய நபர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று முன்தினம் Read More

Read More
LatestNewsTOP STORIES

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு….. மூவர் படுகாயம்!!

நிட்டம்புவ பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மூவர் காயமடைந்துள்ளதாக வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானதாக கருதப்படும் வாகனத்தில் வந்த குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வாகனத்தை Read More

Read More
LatestNewsTOP STORIES

கலவரக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூட்டு தாக்குதல்….. ஒருவர் மரணம் – கவலைக்கிடமான நிலையில் இருவர்!!

ரம்புக்கனையில் பொலிஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவத்தை பொலிஸ் பேச்சாளர் உறுதி செய்துள்ளார். பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி முற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது. காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவோரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்   தற்போது ரம்புக்கனை பகுதியில் விசேட அதிரடிப்படை பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More