பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசை பொறுப்பேற்க தயார்….. அனுர குமார திசாநாயக்க!!

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அரச தலைவர் கோட்டபாய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரை நாட்டில் ஸ்திரத்தன்மை நிலவாது என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “கோட்டா கோ கம“ போராட்டத்தை தவிர்த்து Read More

Read more

கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்காக அதிவிசேட வர்த்தமானி!!

கொரோனா தடுப்பூசி தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை சுகாதார அமைச்சரினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பூரண தடுப்பூசி ஏற்றாதவர்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்க முடியாது. சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களில் கொரோனா தொற்றுக் குறைவடைந்திருந்த நிலையில், மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Read more

சீனி விலை அதிகரிப்பை தடுக்க, இறக்குமதியாளர்களால் வழங்கப்பட் ஆலோசனை!!

சீனி விலையை கட்டுப்படுத்த இறக்குமதியாளர்கள் தீர்வொன்றை தெரிவித்துள்ளனர். இதன்படி சீனியை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகையை வங்கிகளுக்கு வழங்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம்(Lasantha Alagiyawanna) கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் சீனி இறக்குமதியை முறைப்படுத்தி கட்டுப்பாட்டு விலையில் வழங்க முடியும் என சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று (27) பிற்பகல் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளது. சீனிக்கு Read More

Read more