உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் மாயம்!!

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்தை சேர்ந்த மூன்று சிறுமிகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் இல்லத்தை சேர்ந்த 14, 15 மற்றும் 16 வயது சிறுமிகளையே காணவில்லை என்று கூறப்படுகின்றது. அவர்களில் ஒருவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என்றும் ஒருவர் உரும்பிராயை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர்.

Read more

14 வயது சிறுமி ஒருவர் மாயம்!!

தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கண்டி-கலஹா தெல்தோட்டை பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இந்நிலையில், கலஹா காவல் நிலையத்தில் குறித்த சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் கலஹா காவல்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பில் அடுத்தகட்ட விசாரணைகளை ஆரம்பத்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தொடர்பில் தகவல் அறிந்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Read more

பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்த சிறுமி பாடசாலை வளாகத்தில் திடீரென மாயம்!!

அம்பாறை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று(29/05/2022) மதியம் 2.30 மணியிலிருந்து மாயமாகி உள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை, கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்தே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை காவல் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளனர்.   காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை காவல்துறையினர் Read More

Read more

கொழும்பில் 18 வயது மாணவி மாயம்!!

கொழும்பு – பம்பலபிட்டி மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும் 18 வயதான மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கல்கிஸ்ஸை − பீரிஸ் வீதியைச் சேர்ந்த மாணவி ஒருவரே காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் காவல் நிலையத்தில் பெற்றோரால் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவி கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more