உணவு விஷமடைந்தமையால் 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி….. ஆபத்தான நிலையில் 16 பேர்!!

​கொக்கலை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமடைந்தமையால் 325 பேர் காலி – கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(20/04/2022) காலை அனுமதிக்கப்பட்டவர்களில் 16 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா குறிப்பிட்டார். வாந்தி, தலைச்சுற்று, வயிற்றுவலி உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் குறித்த நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more

ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி வவுனியாவில் தூக்கில் தொங்கி மரணம் (புகைப்படம்)!!

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா நகருக்கு சென்ற நிலையில் தனிமையில் இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டிற்கு வந்த போது குறித்த இளம் யுவதி வீட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக குறித்த யுவதியை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட போதும் Read More

Read more