சுற்றுலா பயணிக்கு எரிபொருள் வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி….. காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை !!

காலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காவல்துறை அதிகாரி எரிபொருள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நேற்றையதினம்(02/07/2022) மோட்டார் சைக்கிளில் சென்ற சுற்றுலா பயணி எரிபொருள் பெறமுயற்சித்த வேளை காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை தடுத்துள்ளார். இது தொடர்பான Twitter  பதிவை பார்வையிட பார்வையிட இங்கே சொடக்குங்கள்…………… இது தொடர்பாக வெளியான காணொலி காட்சியில் சுற்றுலாப் பயணிக்கு எரிபொருளை வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி எமது தேசிய கொள்கை சுகாதார Read More

Read more

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா!!

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் இது குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என நாமல் Read More

Read more

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சந்தோசமான செய்தி!!

இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு பயணிகள், பூரண தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொவிட் பரிசோதனை அவசியமற்றது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச ( Upul Dharmadasa)  தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் கூறியுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முன்னர், பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். கொவிட் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை செலுத்திக்கொண்டமையானது பூரண Read More

Read more

வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர் தமது உழைப்பின் ஒரு பகுதியை தாய்நாட்டுக்கு அனுப்பினால் எமது பொருளாதாரத்துக்கு அது மிகவும் பயனுடையதாக இருக்கும் ….. ஜீ.எல்.பீரிஸ்!!

வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர் தமது உழைப்பின் ஒருபகுதியை நாட்டுக்கு அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் பெறுமதியை காட்டிலும் மேலதிகமாக இரண்டு ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தாலியில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றிலேயே இதை குறிப்பிட்டார். “வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தமது நாடுதான் அடையாளம். என்றாலும் வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டின் அரச தலைவரை விமர்சித்தல், கறுப்புக் கொடிகளை காண்பித்தல் உட்பட பல்வேறு விடயங்களை செய்வது அரசுக்கு எதிரானதாக அமையாது வெளிநாடுகளிலிருந்துக்கொண்டு Read More

Read more

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் 

தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான விசா கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. அத்துடன், எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more