விமான நிலையம் மூடப்படுகின்றதா? – அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வகுத்துள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், விமான நிலையங்கள் மூடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்தார். பல நாடுகள் இலங்கையை சிவப்பு பட்டியலிட்டிருந்தாலும், கடந்த வாரங்களில் சுமார் 200 முதல் 300 பயணிகள் வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Read more

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்களுக்கு மீண்டும் திருத்தி வெளியான அறிவித்தல்!!

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் மக்களுக்கான தனிமைப்படுத்தல் முறையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மீண்டும் திருத்தியமைத்துள்ளார். அதன்படி, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன் வெளியுறவு அமைச்சு அல்லது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதி பெற தேவையில்லை. எனினும், அத்தகையவர்கள் அனைவரும் நாட்டிற்கு வந்தவுடன் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான சுற்றறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

Read more

சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டோருக்கு அதிர்ச்சி தகவல்!!

சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு, வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமம் இருப்பதாக வெளிநாடு செல்ல காத்திருப்போர் கருதுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட Read More

Read more

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு புதிய சிக்கல்!!

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 4.8ஆக இருந்த வேலையின்மை தற்போது 5.5 வீதமாக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்த இலங்கையர்கள் பலரும் நாட்டிற்கு வந்த காரணத்தினால் இந்த வீதம் உயர்ந்துள்ளது என கூறப்படுகிறது. இதேவேளை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கற்றல் நடவடிக்கைக்காக செல்லும் இலங்கையர்களுக்கு தற்போது இது புது பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது. சினோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய கோவிட் தடுப்பூசி பெற்றவர்களை ஐரோப்பிய நாடுகள் நிராகரிக்கும் நிலைமை உருவாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு !!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்களை கடந்திருந்தாலும், விமான நிலைய பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியாகும் வரை தனிமைப்படுத்தலில் ஈடுபடுவது அவசியம் என ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களுக்கும் மீண்டும் தொற்று ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும், இதனாலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சின், தனிமைப்படுத்தல் பிரிவின், விசேட சமுக வைத்திய நிபுணர் டில்ஹானி சமரசேகர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் Read More

Read more

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களுக்காக புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் புதிய சுகாதார வழிக்காட்டல்கள் பலவற்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.    

Read more