நிகழ்வுகளை மண்டபங்களில் நடத்த காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியான தகவல்!!

திருமண மண்டப மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, திருமண மண்டபக் கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு இது பொருந்தாது என்றும் இன்று முதலே இந்த 40 சதவீத விலை உயர்வு தேவை என்று அவர் Read More

Read more

எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கிறது!!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதன்படி, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க கடந்த 15ஆம் திகதி தமது பதவியை Read More

Read more

உணவு விஷமடைந்தமையால் 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி….. ஆபத்தான நிலையில் 16 பேர்!!

​கொக்கலை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமடைந்தமையால் 325 பேர் காலி – கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(20/04/2022) காலை அனுமதிக்கப்பட்டவர்களில் 16 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா குறிப்பிட்டார். வாந்தி, தலைச்சுற்று, வயிற்றுவலி உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் குறித்த நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more

இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளது….. புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள்!!

எதிர்வரும் தமிழ் – சிங்கள புதுவருடப்பிறப்பில் இலங்கையில் மீண்டும் விலை அதிகரிப்புகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களில் ஒன்று கோதுமை மா விநியோகத்தை நிறுத்தியுள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் தற்போதைய விலை 210 தொடக்கம் 220 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை கோதுமை மாவிற்கான Read More

Read more

ஒரு கப் Tea நூறுரூபா…..உணவக உரிமையாளர்கள் சங்கம்!!

பால் தேனீரின் விலையை 100 ரூபாய் வரை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நிலவும் சூழ்நிலையில் உணவகங்களில் பால் தேனீர் விற்பனை செய்வதை நிறுத்த நேரிடும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறியுள்ளார். இதனிடையே உள்நாட்டு பால் மாவின் விலையை அதிகரிக்க எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை கால்நடை வள ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். தேசிய பால் மா உற்பத்தி அதிகரிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் Read More

Read more

உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம்….. அசேல சம்பத்!!

இலங்கையில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டமையினால் உணவகங்களில் சமைத்த உணவுகள் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் (Asela Sampath) தெரிவித்துள்ளார். உணவகத்தில் உணவுகள் சமைப்பதற்கு கட்டாயம் எரிவாயு அவசியம் எனவும் உணவகங்களில் எரிவாயு அடுப்புகள் மாத்திரமே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், எரிவாயு கலவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட சிலிண்டர்களின் விநியோகத்தை மாத்திரம் நிறுத்துமாறு லிட்ரோ நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கின்றோம். இல்லை என்றால் இன்று முதல் Read More

Read more

அரச மருத்துவ அதிகாரிகள் பாடசாலை சிற்றுண்டிச்சாலை தொடர்பில் வெளிவந்த சுற்றறிக்கை!!

பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அறிவித்துள்ளது. எனினும், பல சிற்றுண்டிச்சாலைகள் அந்த சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவதில்லையென வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது , மாணவர்களின் இணை பாடவிதான Read More

Read more

உணவு உரிமைகள் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியான தகவல்!!

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், கம்பஹா, களுத்துறை, காலி,மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் கொவிட் பரவல் தொடங்கிய டிசம்பர் 2020 முதல் இந்த ஆண்டு ஜனவரி 30 வரையிலான காலகட்டத்தில் நடத்திய ஆய்வில், கொவிட் தொற்று பரவியதன் பின்னர் இலங்கையின் சனத்தொகையில் சுமார் 60 வீதமானோர் சத்தான உணவை உட்கொள்ளவில்லை என உணவு உரிமைகள் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் மலிவான உணவை உண்பதாகவும், 69 சதவீதம் Read More

Read more

எமது பிரச்சனைக்கு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் வருடம் முதல் நாட்டின் சகல மக்களும் பட்டினியால் மரணிக்க வேண்டி ஏற்படும்…. போரட்டத்தில் விவசாயிகள்!!

இலங்கையில் உரம் உள்ளடங்கலாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்திய தமிழர் தாயகப் பகுதிகளில் நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள், நாட்டு மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமைக்கு அரசாங்கம் வித்திட்டுவருவதாக எச்சரித்துள்ளனர். ஒரே இரவில் இரசாயன உரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பதை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குறிப்பிட்டனர். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து Read More

Read more

“நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை….” அரசாங்கம் அறிவிப்பு!!

போதிய உணவு கையிருப்பில் இருப்பதால், உணவுப் பற்றாக்குறை தொடர்பில் பீதியடைய வேண்டாம் எனவும் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டில் உணவுப் பற்றாக்குறை இல்லை என பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில், நாட்டில் அரிசி மற்றும் சீனிக்கு பற்றாக்குறை நிலவுவதாக பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், நாட்டு மக்களுக்கு தேவையான அரிசி மற்றும் சீனி தற்போது கையிருப்பில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Read more