அரச காணிகள் 1500 ஏக்கரில் இராணுவத்தினரால் விவசாயம்!!

நாடு முழுவதும் உள்ள தரிசு நிலத்தில் அல்லது கைவிடப்பட்ட நிலத்தில் அரச காணிகள் உள்ளடங்களாக 1500 ஏக்கரில் விவசாயம் மேற்கொண்டுஇலங்கை உணவு பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தை மேம்படுத்தும் முகமாக இராணுவத்தின் பசுமை விவசாய வழிகாட்டல் குழு நிறுவப்பட்டுள்ளது. அரச தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் இந்த அவசர ஏற்பாடு ஆரம்பிக்கப்பட உள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் பிரதி நிலை மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய இத் திட்டத்தின் Read More

Read more

சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து உள்ளூர் மீனவர்கள் போராட்டம்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும், மாதகல் பிரதேச கடற்தொழிலாளர்களும் இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். 2500 இந்திய இழுவைமடி தொழிலை நிறுத்தும் வரை போராடுவோம், இந்திய அரசு வடக்கு மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க கோருகிறோம். எமது கடல் வளத்தையும் வாழ்வாதாரத்தையும், பாதுகாக்க இலங்கை அரசை வலியுறுத்துவோம் போன்ற Read More

Read more

இரசாயன உரம் 2500mt இறக்குமதிக்கு அனுமதி!!

இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா (Chandana Lokuheva) தெரிவித்துள்ளார். நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சேதன உர இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாக சந்தன லொகுஹேவா தெரிவித்துள்ளார். பழங்கள் மற்றும் மலர் செய்கைக்கு இரண்டாயிரம் மெட்ரிக்தொன் கலப்பு உரம் தேவை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், 913 மெட்ரிக்தொன் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேதன திரவ Read More

Read more

விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி – வடக்கு, கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்!!

விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலி. கிழக்கு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புத்தூர் மற்றும் உரும்பிராய் கம நல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் 9.15 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றுள்ளார். வெங்காய இறக்குமதியை முற்றாகத் தடை செய், விவசாயிகளுக்கான உரம், கிருமிநாசிகளை போதியளவு கிடைக்க வழி செய், உருளைக்கிழங்கு Read More

Read more

நிர்ணய விலையில் சிறுபோக நெல்லை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி!!

நிர்ணய விலையின் கீழ், சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, நாடு நெல் ஒரு கிலோகிராம் 50 ரூபாவிற்கும் சம்பா நெல் ஒரு கிலோகிராம் 52 ரூபாவிற்கும் கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் 55 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Read more

விவசாயிகளுக்கு நட்டஈடு -அரசாங்கம் அறிவிப்பு!!

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதனப் பசளை முறை மூலம் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நட்டஈடு வழங்கப்படும் என கால்நடை வளர்ப்பு, பண்ணை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற கால்நடை வளர்ப்பு, பண்ணை மேம்பாடு மற்றும் பால் மற்றும் முட்டை உற்பத்தி தொடர்பிலான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேதனப் பசளை முறை மூலம் இழக்கப்படும் உற்பத்திக்களுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படும். Read More

Read more

12,000 கிலோ கத்தரிக்காயை தீ வைத்து எரித்த விவசாயி! காரணம் என்ன??

தம்புல்லையில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் விளைந்த சுமார் 12,000 கிலோ கத்தரிக்காய்யை தீவைத்து எரித்துள்ளார். பூச்சிக்கொல்லி மருந்து இல்லாததால் விவசாய அதிகாரிகளின் முன் இவர் தனது தோட்டத்து கத்தரிக்காய்க்கு தீ வைத்துள்ளார். ஐந்து ஏக்கர் காணியில் விதைக்கப்பட்ட கத்தரிக்காயில் 14, 000 கிலோ அறுவடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்காததால் இவற்றில் 12, 000 கிலோ விற்கமுடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. 2, 000 கிலோ மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது என குறித்த விவசாயி Read More

Read more

சிறு போக நெற்கொள்வனவு நடவடிக்கை இன்று ஆரம்பம் !!

சிறு போகத்தில் நெற்கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (01)  ஆரம்பமாகவுள்ளன. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சகல நெல் விநியோக சபைகளின் ஆலைகளின் ஊடாக விவசாயிகளிடம் நெல்லைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக ​நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இதற்காக 19 மாவட்டங்களில் களஞ்சியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது. சிறு போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஆரம்பமாகவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் Read More

Read more

வியவசாயிகளுக்கு அடுத்த போகம் முதல் கிடைக்கப்பெறவுள்ள நன்மை!!

விவசாயிகளுக்கு இவ்வருடம் மாத்திரமே  இரசாயண பசளை, அடுத்த போகம் சேதனப்பசளை இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்திற்கு அமைச்சர்கள் விஜயம் செய்து நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக அரசாங்கத்தின் நிர்ணைய விலைக்கு நெல் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தினை இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைத்தனர். மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அரசடிச்சேனை நெல் சந்தைப்படுத்தல் நிலையத்தில் இவ்வருடத்தின் சிறுபோகத்தில் விளைந்த உலர்த்திய நெல்லினை அரசாங்கத்தின் நிர்ணைய விலையான 56ரூபாய் Read More

Read more

கரடியின் தாக்குதலுக்குள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதி!!

திருகோணமலை – திரியாய் பகுதியில் வயல்காவலுக்குச் சென்ற நபரொருவர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (13) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. திரியாய் – கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே. பிரபாகரன் (48 வயது) என்பவரே இவ்வாறு கரடியின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திரியாய் பகுதியில் உள்ள வயல் காவலுக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த போது கரடி பாய்ந்து கடித்ததாகவும் இதனையடுத்து காலில் காயம் ஏற்பட்ட Read More

Read more