அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான தேவையற்ற பலப்பிரயோகத்தை “ஐரோப்பிய ஒன்றியம்” வன்மையாகவும் கண்டிப்பு!!

இலங்கையின் போராட்டக்காரர்கள் மீது தேவையில்லாத வன்முறைகள் நடப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான தேவையற்ற பலப்பிரயோகத்தை வன்மையாகவும் கண்டித்துள்ளது.   மற்றும், அமைதியான ஒன்றுகூடல் மற்றும் சங்கத்தின் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று கடுமையான அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இலங்கையின் புதிய அரசாங்கம் அதன் GSP+ உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கிச் செயற்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. Read More

Read more

பயங்கரவாத தடைச்சட்ட விவகாரம்- மீண்டும் ஸ்ரீலங்கா விடுத்துள்ள அறிவிப்பு!!

ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உரிய மற்றும் பன்முக உரையாடலுக்காக தொடர்ச்சியாக பொறுப்புடன் செயலாற்றும் என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் அறிவித்துள்ளது. மேலும் இருதரப்பு ஒத்துழைப்பின் சகல பிரிவு மீளாய்வு அடுத்த வருடம் முதல் காலாண்டில் ஒன்றிணைந்த ஆணைக்குழுவை கூட்டி கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஸ்ரீலங்காவில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவேண்டும் என ஐரோப்பிய Read More

Read more