பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை….. கல்வி அமைச்சு!!

அடுத்த வாரம் நகர்ப்புறங்களில் பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் கப்பல் வருவது மேலும் தாமதமடையும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்த டுவிட்டர் செய்தியே இதற்குக் காரணமாக கூறப்படுகின்றது.   எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு கடந்த வாரம் நடைபெறாத பாடசாலைகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் நகர்ப்புறங்களில் நடத்த முடியுமா Read More

Read more

முதலாம் ஆண்டுக்கான கற்பித்தல் ஏப்ரலில் ஆரம்பம்!!

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக முதலாம் ஆண்டுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardane) தெரிவித்துள்ளார். அத்துடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது மற்றும் பரீட்சைகள் சம்பந்தமாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று கண்டியில் விடயங்களை தெளிவுப்படுத்தினார். எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலை தவணை முடிவடைந்து மீண்டும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. பாடசாலை கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்யப்படும். 5 Read More

Read more

கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி – ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார். எனவே, தற்போது நடைபெற்று வரும் ஒன்லைன் மூலமான கல்விச் செயற்பாட்டை தொடர்ந்தும் புறககணிக்கவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாளை (22) கொழும்பில் பாரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடுகள் தொடர்பான தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண திங்கள்கிழமை (26) அமைச்சரவையில் ஒரு திட்டத்தை சமர்ப்பிப்பதாக Read More

Read more

பாடசாலைகள் திறப்பது எப்போது? சற்றுமுன் வெளிவந்த தகவல் !!

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண நிலைமையினால், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கின்றமை குறித்து, இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துக கொண்டே செல்கின்றது. எனினும் இம்மாதம் 29ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கிய Read More

Read more

பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டின் பொருளாதார தேவை மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள், ஏற்புடையது அல்லவென்பதை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஊடாக பாடத்திட்டத்தை புதுப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை ராஹுல மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய வித்தியாலயங்களுக்கு விஜயம் செய்த போதே அவர் இதனைக் கூறினார். பாடசாலை பாடத்திட்டங்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களும் தற்போதைய தொழில் வாய்ப்புக்களுக்கு இணைந்ததாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். Read More

Read more