முதலாம் ஆண்டுக்கான கற்பித்தல் ஏப்ரலில் ஆரம்பம்!!

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக முதலாம் ஆண்டுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardane) தெரிவித்துள்ளார். அத்துடன் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது மற்றும் பரீட்சைகள் சம்பந்தமாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று கண்டியில் விடயங்களை தெளிவுப்படுத்தினார். எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலை தவணை முடிவடைந்து மீண்டும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. பாடசாலை கல்வியாண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்யப்படும். 5 Read More

Read more

பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டின் பொருளாதார தேவை மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள், ஏற்புடையது அல்லவென்பதை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஊடாக பாடத்திட்டத்தை புதுப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை ராஹுல மற்றும் மஹிந்த ராஜபக்ஸ ஆகிய வித்தியாலயங்களுக்கு விஜயம் செய்த போதே அவர் இதனைக் கூறினார். பாடசாலை பாடத்திட்டங்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களும் தற்போதைய தொழில் வாய்ப்புக்களுக்கு இணைந்ததாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். Read More

Read more