ஹெய்டியில் பாரிய பூமியதிர்ச்சி! 304 பேர் பலி – பலர் படுகாயம்!!
ஹெய்டியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் 304 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் 1,800 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 7.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. மேலும், நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்குண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Read more