காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு….. மேலும் இரு வருட காலாவதி எல்லை நீடிப்பு!!

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாரதி அனுமதிப்பத்திரத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தில் வெளியிடப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கூறியுள்ளார். சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகள் இல்லாமையால் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்து வழங்குவதில் சிக்கல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்னர், ஒரு வருடத்திற்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு வந்தநிலையில் தற்போது நீடிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. Read More

Read more

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பிரித்தானியாவில் பயன்படுத்த முடியும்!!

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பிரித்தானியாவில் பயன்படுத்த முடியும் என மோட்டார் வாகன திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பயிற்சி பரீட்சைக்கு தோற்றாமல் உரிய அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் வசந்த ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இதன்போது, குறிப்பாக 2016 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள் Read More

Read more

சிறு தவறுகளுக்கும் பெரிதளவில் குறைக்கப்படும் Driving License புள்ளிகள்….. 24 இலும் குறைக்கப்பட்டிருந்தால் சாரதி உரிமம் இரத்து!!

ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்திற்கமைய, வீதிகளில் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தில் இருந்து புள்ளிகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் செய்யும் 32 தவறுகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு ஓட்டுனர் உரிமத்தில் 24 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டிருந்தால் அந்த உரிமம் இரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமத்தில் 10 புள்ளிகள் குறைக்க காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Read More

Read more

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு காத்திருப்பவர்களுக்கு முக்கிய மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். குறித்த சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கான காரணமாகும். நாட்டில், சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டிற்கே அனுப்பப்படும். Read More

Read more

சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை முடிந்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கான மூலப்பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அட்டைகளுக்கு பதிலாக தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் 06 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி முதல் Read More

Read more