உயர்தர பரீட்சையின் செய்முறை பரீட்சைகளில் தோற்றாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் நாடகம் மற்றும் அரங்கியல் பாடங்களுக்குரிய செய்முறை பரீட்சைகளில் தோற்ற முடியாமல் போன பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நேற்று (06/04/0222) செய்முறை பரீட்சைகள் இடம்பெற்ற நிலையிலேயே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகள் உரிய பரீட்சை நிலையங்களுக்குச் சென்று தங்களின் செய்முறைப் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

Read more

207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானம்!!

இம்முறை க. பொ. த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறொருவர் பரீட்சைக்கு தோற்றியது தொடர்பாக பரீட்சை முறைகேடு குற்றச்சாட்டுக்கள் ஆறு பதிவாகியுள்ளன. மேலும், கையெழுத்து மாற்றம், விடைத்தாள் ,கையடக்க தொலைபேசிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் ஒரேமாதிரியான விடைகள் போன்ற விடயங்கள் காரணமாக பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரீட்சை முறைகேடுகள் தொடர்பாக, பரீட்சைத் திணைக்களத்திற்கு 4,174 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததுடன், அதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதன் Read More

Read more