18 – 30 வயதுக்குட்பட்டோருக்கு அறிவிக்கப்பட்டது நாள்!!

செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய தொற்று நோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சமித கினிகே இதை தெரிவித்தார். மேலும், இலங்கையில் 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் 3.2 மில்லியன் பேர் உள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read more

உலகின் முதல் DNA கொரோனா தடுப்பூசியை உருவாக்கி இந்தியா சாதனை

இந்தியாவில் DNA-வை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டி.சி.ஜி.ஐ) அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் சைடஸ் கெடிலா என்கிற மருந்து நிறுவனம், DNA-வை அடிப்படையாகக் கொண்டு குறித்த தடுப்பூசியை தயாரித்துள்ளது. உலகிலேயே சைகோவ் டி தான் DNA மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி ஆகும். இந்த கொரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப Read More

Read more

தடுப்பூசியை செயலிழக்கச்செய்யும் புதிய வைரஸ் இலங்கையில் உருவாகும்! இறுதியில் ஏற்படப்போகும் ஆபத்து!!

இலங்கையில் இந்த ஆண்டின் இறுதியில் தற்போதைய தடுப்பூசியை செயலிழக்கச்செய்யும், கொரோனா வைரஸின் புதிய கடுமையான திரிபு உருவாகும் ஆபத்து காணப்படுகின்றது. புதிய கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஒரு ஆபத்தான அச்சுறுத்தலை நாங்கள் எதிர்கொள்கிறோம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு கொரோனா தொற்றுநோயின் 4 வது அபாய நிலையில் இருப்பதாகவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சங்கத்தின் செயலாளர் டாக்டர் செனால் பெர்னாண்டோ வலியுறுத்துகிறார். Read More

Read more

“உடனடியாக நாட்டை முடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” முக்கிய தரப்பில் இருந்து அறிவுப்பு!!

கொரோனாவின் “டெல்டா” திரிபு நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வருவதால், நாட்டை மூடிவிட்டு, இந்த பேரழிவு தரும் தொற்றுநோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் அரசாங்கத்திற்கு ஒரு வலுவான கோரிக்கையை விடுக்கின்றனர். நாடு முழுவதும் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை மட்டும் விதிப்பதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியாது. ஒரு சில கட்டுப்பாடுகள் Read More

Read more

தீவிரமடையும் டெல்டா!! சனிக்கிழமை வருகிறது இறுதி அறிக்கை!!

கொரோனா தொற்றின் திரிபடைந்த டெல்டா தொற்று தீவிரமடைந்திருப்பதாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார். டெல்டா தொற்றினை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகளும் மும்முரமாக இடம்பெற்று வருவதாக ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து வெளியிட்டபோது அவர் கூறியுள்ளார். இதுவரை கிடைத்த மாறுபட்ட கொரோனா தொற்றின் மாதிரிகள் தற்சமயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை இறுதியறிக்கையை வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read more

தடுப்பூசியினால் “டெல்டா”வை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது! வைத்தியர் எச்சரிக்கை!!

தடுப்பூசி நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட்ட போதிலும் டெல்டா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தற்போது இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்களும் தொற்றுக்குள்ளாகும் நிலைமை காணப்படுவதாகவும் அப்பணியாகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஜ்சித் சுட்டிக்காட்டினார். ஆகவே மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாட்டில் படிப்படியாக சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் தொற்றின் நிலைமையை கருத்திற்கு கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை தளர்த்துவது அல்லது நீடிப்பது குறித்து அறிவிக்கப்படும். Read More

Read more

இலங்கையில் டெல்டா பரவக்கூடிய அபாயம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!!

உலக நாடுகளில் தற்போது பாரிய அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ள டெல்டா மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று இலங்கையில் மேலும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதா இல்லையா என்கிற தீர்மானம் அடுத்தவாரத்தில் எடுக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இலங்கையில் டெல்டா மாறுபாடான கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 05 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலயைில் தொற்று மேலும் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. Read More

Read more