06 மற்றும் 09 வயது சகோதரர்கள் மரணம்!!

எரகம – வானேகமுவ பிரதேசத்தில் உள்ள கால்வாயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனும் சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.   நேற்று (06/05/20222) பிற்பகல் குறித்த இரு பிள்ளைகளும் நீராட சென்ற போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போது உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 6 வயது சிறுவனும் 9 வயது சிறுமியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. Read More

Read more

மிருசுவிலில் ரயிலுடன் மோதுண்டது பட்டா ரக வாகனம்….. 12  வயது சிறுவன் மரணம் – இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற ரயில் – பட்டா ரக வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் ஜனுசன்  12  வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் தந்தையான நாகமணி தயாபரன் வயது 45 மற்றும் உயிரிழந்தவரின் சகோதரனான தயாபரன் தனுஷன் வயது 15 ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

Read more

18 வயது மாணவன் சடலமாக கிணற்றிலிருந்து மீட்பு!!

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (13.03.2022).மாலை 04.30மணியவில் இடம்பெற்றதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட மாணவன் பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பாரதிதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த மாணவன் பொகவந்தலாவ சென்மேரீஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியினை Read More

Read more