06 மற்றும் 09 வயது சகோதரர்கள் மரணம்!!

எரகம – வானேகமுவ பிரதேசத்தில் உள்ள கால்வாயில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனும் சிறுமியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.   நேற்று (06/05/20222) பிற்பகல் குறித்த இரு பிள்ளைகளும் நீராட சென்ற போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போது உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் 6 வயது சிறுவனும் 9 வயது சிறுமியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. Read More

Read more

வாழைப்பழத்தால் 11 மாத குழந்தையின் உயிர் பறிபோனது!!

நேற்று (12) மாலை வாழைப்பழத்தை உட்கொண்ட 11 மாத ஆண் குழந்தை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். அஹங்கம, அட்டுங்கலே தோட்டத்தில் வசிக்கும் குழந்தையே உயிரிழந்தது. அஹங்கம கிராமிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Read more