வெள்ளவத்தை கடற்கரையில் தலையின்றி சடலம் கரையொதுக்கம்!!

கொழும்பு – வெள்ளவத்தை கடலில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. இச்சடலத்தில் தலை அற்றுக் காணப்பட்டதுடன் உடல் முழுமையாக உருகுலைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ணொருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more

யாழ்ப்பாண கடற்பரப்பில் அடுத்தடுத்து கரையொதுங்கும் மனித உடல்கள்!!

நேற்று காலை வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் இரு உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதே போல், யாழ்ப்பாணம் – நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட, 5ஆம் வட்டாரம் திரிலிங்கபுரம் கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் குறித்த பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் இன்று அவதானிக்கப்பட்ட நிலையில் நெடுந்தீவு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், மேலதிக விசாரணை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து சடலங்கள் கரையொதுங்கி வரும் நிலையில், Read More

Read more

உடனடியாக மின்தகன இடங்களை அமைக்க சாத்தியமில்லை – யாழ் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்!!

புதிதாக மின்தகன இடங்களை உடனடியாக அமைப்பதற்கான சாத்தியமில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில்ல அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்திலே சடலங்களை மின்தகனம் செய்வதற்கான வசதி யாழ் மாநகர சபையிடம் மட்டுமே உள்ளது. முதலில் தகனம் செய்யும் போது ஒரு நாளில் மூன்று உடல்கள் தகனம்செய்யப்பட்டன. பின்னர் அது நான்கு, ஐந்து Read More

Read more