உடன் ‘பிளக் லொக்டவுன்’ நடைமுறைப்படுத்தவும் – அரசாங்கத்திடம் சென்ற இறுதிக் கோரிக்கை!!

நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா வைரஸ் தொற்று தாக்கத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம். அமுல் படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதுமானதல்ல என வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தது மூன்று வாரத்திற்கு ‘பிளக் லொக்டவுன்’ ஒன்றுக்கு செல்லுமாறு வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். முழுமையான வலியுறுத்தல்கள் அடங்கிய ஆவணங்களை வைத்திய நிபுணர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் Read More

Read more

முடங்குகிறதா இலங்கை? ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி அறிவிப்பு!!

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தயார் நிலையிலும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன்போது பேசிய ஜனாதிபதி, தடுப்பூசி திட்டத்தை முழு வேகத்தில் முன்னெடுக்கவும், மக்களுக்கு விரைவில் தடுப்பூசி போடவும் வலியுறுத்தியுள்ளார். நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற Read More

Read more

நாட்டை முடக்குவது தொடர்பில் வெளிவரவுள்ள முக்கிய அறிவித்தல்??

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதன் பின்னர் நாட்டை முடக்குவது அல்லது பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது இன்றோ அல்லது நாளையோ சாத்தியமாகலாம் என்று தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நூறிற்கும் அதிகமாகவுள்ளதை சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில், அடுத்த சில வாரங்களில் பெரும் நெருக்கடி நிலையினை எதிர் கொள்ள வேண்டி ஏற்படும் என்றும் சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளார்கள். இதனையடுத்து Read More

Read more

நான்கு வாரங்களுக்கு முடக்கப்படுமா இலங்கை??

அதிவேகமாக பரவிவரும் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, குறைந்தது நான்கு வாரங்களுக்கேனும் நாட்டை முடக்கி, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு, சுகாதார தரப்பினர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தல் மற்றும் நாளுக்கு நாள் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆகியன, சுகாதார கட்டமைப்பினால் சமாளிக்க முடியாது என சுகாதார தரப்பு கூறியுள்ளது. அதனால், நாட்டை 4 வாரங்களுக்கு முடக்குவது அத்தியாவசியமானது என அரசாங்கத்திடம் சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது. நாளாந்தம் 3000தை அண்மித்த தொற்றாளர்களும், Read More

Read more

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு! அரசாங்கம் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமை, வீடுகளிலிருந்து வெளியேறுதல் ஆகியன Read More

Read more