இலங்கையில் கொரோனா மரணங்கள் உச்சம் தொட காரணம் என்ன??

கொவிட் பரவுவதை கட்டுப்படுத்த சமூகத்தில் பொது சுழற்சியை 80% முதல் 90% வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாடு கொவிட் 4 ஆம் இடர் நிலையில் இருப்பதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. நாட்டின் தடுப்பூசி செயல்முறை, அறிவியல் முறையின் எல்லைக்கு வெளியே செயற்படுத்தப்பட்டமையே, மரண எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு காரணம் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read more

அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் மரணங்கள் அதிகரிக்கும் – பொது சுகாதார பரிசோதகர்கள்!!

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களில் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நோயாளிகள் அதிகரிப்பதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். அடுத்த 14 நாட்களுக்கு இந்த நிலைமையை கட்டுப்படுத்த நாம் என்ன செய்தாலும் நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை மிக சடுதியாக அதிகரிக்கும். இதனை சுகாதார கட்டமைப்பால் தாங்க Read More

Read more

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – காரணம் கண்டுபிடிப்பு!!

இலங்கையில் அண்மைய சில நாட்களாக கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. எனவே கொவிட் உயிரிழப்புக்கள் அதிகளவில் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என கருதக்கூடிய விடயங்களை சுகாதார அமைச்சின் நிபுணர் குழு அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாக கொவிட் தொற்றாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் நோயாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெறுவதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பங்கள் போதுமானதாக Read More

Read more

யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்குக் கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக Read More

Read more