“சீனாவின் தடுப்பூசி இலங்கையர்களுக்கு வேண்டாம்” இலங்கையின் மூத்த மருத்துவ நிபுணர்கள் போர்க்கொடி

சீனாவால் வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை நாட்டினருக்கு பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையின் மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு வழங்கப்பட்ட 600,000 தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்து அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள மூத்த மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் (AMS) தலைவர், டாக்டர் லலந்த ரணசிங்க கையெழுத்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தடுப்பூசிகள் தொடர்பான அனைத்து சமர்ப்பிப்புகளையும் மறுஆய்வு செய்வதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சுயாதீன நிபுணர் குழுவை நியமித்தது. மார்ச் Read More

Read more

இலங்கையில் கொரோனாவினால் 18 மாத குழந்தை உட்பட ஏழு பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 7பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி கராபிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மூளையில் ரத்தம் கசிதல் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு – 15 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் Read More

Read more

“வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்” பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் 29,206 குடும்பங்களைச் சேர்ந்த 80,000 பேர் சுயதனிமையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுய தனிமையில் இருப்பவர்களை இலங்கை இராணுவம், காவல்துறை மற்றும் சுகாதார பிரிவுகள் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார். வெளியில் தனிமைப்படுத்தப்பட்ட அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ளவர்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது, மேலும் வெளியாட்களை உள்ளே அனுமதிக்கவும் முடியாது என்றும் கூறினார். தனிமைப்படுத்தப்பட்ட Read More

Read more