திருகோணமலையில் முடக்கப்பட்ட மேலும் ஒரு பகுதி- இராணுவம் பொலிஸார் கடமையில்!

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் சுபதலங்கர மாவத்த தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பகுதியில் போக்கு வரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வீதிகளை மறித்து காவல்துறை மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக திருகோணமலையில் ஏற்கனவே பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more

யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்குக் கொரோனா தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக Read More

Read more

நாட்டை முழுமையாக முடக்கத் திட்டமா? பாதுகாப்பு செயலர் வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார். ஆனால், கொரோனாத் தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் முடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் நாட்டை முழுமையாக முடக்கினால் பொருளாதார ரீதியில் நாடு வீழ்ந்து விடும். Read More

Read more

மே மாதம் இலங்கைக்கு காத்திருக்கின்றது பேராபத்து!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்கள் பெரிதும் புறக்கணித்ததை அடுத்து, மே மாதத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் அபாயம் உள்ள என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் பல எச்சரிக்கைகளை விடுத்த போதிலும், மக்கள் கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை பொதுவில் கொண்டு செல்வதைக் காணலாம் என்று கூறினார். திருமதி இலங்கை பிரச்சினை, சுற்றுச்சூழல் Read More

Read more

வடக்கில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று- ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளில் இறுக்கத்தை தளர்த்தவேண்டாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் சரா.புவனேஸ்வரன் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வடக்கில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொதுப்போக்குவரத்துச் சேவைகளில் பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் பயணம் செய்கின்றனர். விசேடமாக ஆசிரியர்கள் பெருமளவானவர்கள் வெளிமாவட்டங்களில் கடமையாற்றுகின்றனர். அவர்கள் பயணிக்கும் Read More

Read more

“சீனாவின் தடுப்பூசி இலங்கையர்களுக்கு வேண்டாம்” இலங்கையின் மூத்த மருத்துவ நிபுணர்கள் போர்க்கொடி

சீனாவால் வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை நாட்டினருக்கு பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையின் மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கைக்கு வழங்கப்பட்ட 600,000 தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்து அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள மூத்த மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் (AMS) தலைவர், டாக்டர் லலந்த ரணசிங்க கையெழுத்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தடுப்பூசிகள் தொடர்பான அனைத்து சமர்ப்பிப்புகளையும் மறுஆய்வு செய்வதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சுயாதீன நிபுணர் குழுவை நியமித்தது. மார்ச் Read More

Read more

இலங்கையில் கொரோனாவினால் 18 மாத குழந்தை உட்பட ஏழு பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 7பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 330 ஆக உயர்வடைந்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி கராபிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் மூளையில் ரத்தம் கசிதல் ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு – 15 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவர் Read More

Read more

“வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்” பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் 29,206 குடும்பங்களைச் சேர்ந்த 80,000 பேர் சுயதனிமையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுய தனிமையில் இருப்பவர்களை இலங்கை இராணுவம், காவல்துறை மற்றும் சுகாதார பிரிவுகள் கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார். வெளியில் தனிமைப்படுத்தப்பட்ட அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ளவர்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது, மேலும் வெளியாட்களை உள்ளே அனுமதிக்கவும் முடியாது என்றும் கூறினார். தனிமைப்படுத்தப்பட்ட Read More

Read more