மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும்…. விசேட வைத்தியர் கூறுகின்றார்!!

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமலும் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், இதற்கிடையில், கொரோனா பரிசோதனைகள் குறைவடைந்துள்ளமையினாலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தன. வீடுகளில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெறும் திட்டத்தின் கீழ் 52,361 பேர் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 37,448 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் Read More

Read more

18 – 30 வயதினருக்கு தடுப்பூசி…. திட்டம் ஆரம்பம் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!!

18 – 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (02) அறிவித்தார். இந்த தடுப்பூசி திட்டம் மாவட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார். 18 – 30 வயதுக்குட்பட்ட 3.7 மில்லியன் பேருக்கு இந்த தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இந்த வயதுக் குழுவில் உள்ள முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 18 – 30 வயதுக்குட்பட்ட சில Read More

Read more

100,000 Pfizer Vaccine தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு!!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் இன்றைய தினம் (28) நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Tweet ஐ பார்வையிட இங்கே சொடக்குக….   இந்த தடுப்பூசிகளை தாம் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. உயிர்களை பாதுகாத்து, பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு அமெரிக்க உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read more

அற்புத மருந்து “RREGN-COV2” இலங்கைக்குமா????

கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருந்தான REGN-COV2 ஐ இலங்கை மருத்துவர்களும் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர். கொரோனா வகைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தும் ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த மருந்து கொரோனா இறப்புகளை குறைக்கலாம் என்றும் எழுதினார். குறிப்பாக அதிக ஆபத்துள்ள கொரோனா தொற்று உள்ளவர்களின் உயிரைக் காப்பாற்ற இந்த மருந்து உதவும் என்று அவர் பரிந்துரைத்தார். Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சைனோபாம் தடுப்பூசிகள்!!

சீனாவிலிருந்து மேலும் 2.3 மில்லியன் டோஸ் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. அத்துடன் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளும் நாட்டை வந்தடைந்துள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

தொடர்ந்து முடக்கப்படும் ஸ்ரீலங்கா?? ஏற்றுக்கொள்ளப்படுமா ரணில் விக்ரமசிங்கவின் கருத்து!!

இலங்கையில் கொவிட் வைரஸிற்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கு இலத்திரனியல் அட்டை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவது அவசியம் என முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் 2021ஆம் ஆண்டிற்கான அதிக பணவீக்க விகிதம் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளது.

Read more

60 வயதிற்கு மேற்பட்ட 455,539 பேர் தொடர்பில் வெளியான முக்கிய செய்தி!!

நாட்டில் தற்போது வரையில் 60 வயதிற்கு மேற்பட்ட 455,539 பேருக்கு எவ்வித கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டின் சனத்தொகையில், 60 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையானது, 35,19,190 ஆக உள்ளது. இந்த நிலையில், அவர்களில் 30,63,651 பேருக்கு ஏதேனும் ஒரு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் எந்தவொரு கொவிட்-19 தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளதவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவில் உள்ளதாகவும் 64,427 பேர் அந்த மாவட்டத்தில் தடுப்பூசியைப் Read More

Read more

சினோபாம் தடுப்பூசி செலுத்தியவர்கள் – வெளியான முக்கிய தகவல்

இலங்கையின் சீன தயாரிப்பான சினோபாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாத நிலைமை எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சினோபாம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்காத நாடாக இருந்தாக இருந்தாலும் குறித்த நாடு வழங்கியுள்ள செயற்பாடுகளை பின்பற்றி அந்த நாட்டிற்குள் நுழைய முடியும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கமைய 140 நாடுகள் வெளியிட்டுள்ள கொவிட் வழிக்காட்டல்களை பின்பற்றி வெளிநாடுகளுக்கு செல்ல Read More

Read more

இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல் – இது மட்டுமே வழி!!

“கொரோனாத் தொற்றிலிருந்து நாம் மீண்டெழ தடுப்பூசியே ஓர் அடைக்கலமாக உள்ளது என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா நிலவரம் தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், கொரோனாத் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை நூற்றுக்கு 51 சதவீதமாக உயர்வடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பத்து இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நேற்று Read More

Read more

மக்களுக்கு சிறந்த கொரோனா தடுப்பூசி இதுதான் – ஆய்வின் முடிவில் உறுதி!!

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசி 95 வீதம் பலனளிக்கின்றது என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் வைத்தியர் பேராசிரியர் ஹேமந்த டொடம்பஹால தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியின் பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது இரண்டாவது டோஸ்கள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் அவை Read More

Read more